இந்திய மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கண்ணாடி போத்தலில் வெடிகளை வைத்து வெடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவாஜி நகர் பகுதியில் திறந்த வெளியில் 12 வயது சிறுவன் ஒருவன், கண்ணாடி போத்தலுக்குள் வெடிகளை வைத்து வெடித்துக் கொண்டிருந்தான்.
இந்நிலையில், அந்த வழியாக வந்த சுனில் நாயுடு (வயது 21) என்ற வாலிபர், சிறுவனிடம் சென்று இப்படி போத்தலில் வைத்து வெடிகளை வெடிக்கக்கூடாது என கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் அந்த சிறுவனுடன் மேலும் இரண்டு சிறுவர்கள் சேர, வாக்குவாதம் முற்றியது. சிறுவர்கள் சேர்ந்து சுனில் நாயுடுவை தாக்கி உள்ளனர். 15 வயது சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தி உள்ளான். இதில் பலத்த காயமடைந்த சுனில் நாயுடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆயினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
#Indianews
Leave a comment