வெள்ளவத்தை_ ராமகிருஷ்ணா வீதி கடற்கரையில் ஒதுங்கிய சடலம் மீட்கப்பட்ட நிலையில்
குறித்த சடலம் தனது சகோதரனினது என பன்னிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் நேற்று அடையாளம் காட்டியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் டீ.பீ.பியல் என்ற 54 வயதுடைய ஒருவராகும். அவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த தனது சகோதரர் சில காலமாக மனநல நோயினால் பாதிக்கப்பட்டிருந்தமையினால் ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews