சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதன் மூலம் தற்போதுள்ள நிதி நெருக்கடிகளை சமாளிக்க இயலும் என ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்,
இந்தியா, சீனா போன்ற நாடுகளிடம் கடன் உதவி கோரினால் நாட்டின் வளங்களை பங்கிட வேண்டிய நிலை ஏற்படலாம்.
உலக சந்தை நிலவரத்துக்கேற்ப விலை அதிகரிப்பு இடம்பெற்று வருவதை எந்த அரசாங்கமாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளதான் வேண்டும்.
நாடு தற்போதுள்ள சூழலில் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதே சிறந்த வழி என அவர் மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews