25 6915d20fc755f
செய்திகள்அரசியல்இலங்கை

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மட்டுமே; சட்டத்தின் முன் அனைவரும் சமமே”: கார்த்திகை வீரர்கள் தினத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

Share

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மாத்திரமே என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நடைபெற்ற கார்த்திகை வீரர்கள் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் ஒன்றாக குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தற்போது ஒன்றிணைந்து விட்டதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

“கடந்த காலங்களில் அரசியல் தலைமைகளிடம் வாக்குமூலம் பெற விசாரணை அதிகாரிகள் அவர்களுடைய வீட்டிற்கு செல்ல வேண்டியிருந்தது. எனினும் தற்போது, சக மனிதர்கள் செல்லும் அதே வாசல் வழியாக அரசியல் தலைமைகளும் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்குச் சென்று வருகின்றனர். சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்களே,” என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

“எங்களுடைய அரசாங்கத்தை வீழ்த்துவதாகக் கதை பேசி வருகின்றனர். அது நடக்காது. இந்த அரசாங்கம் மேலும் உறுதியாகக் கட்டியெழுப்பப்படும். கட்சி பேதங்களின்றி அரசாங்கம் தனது பணியை நிறைவேற்றும்,” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...