கரூர் சம்பவம்! தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெளியான அதிரடி அறிவிப்பு..

15

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கரூர் சம்பவம் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையச் செயலகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில்,

நம் சொந்தங்களை இழந்த வேதனையிலும் வருத்தத்திலும் நாம் இருக்கும் இச்சூழலில், நம் கழகத் தலைவர் அவர்களின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.

இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை நம் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 தேர்தலை எதிர் கொண்டு தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய தொடங்கியுள்ள விஜய் 3-ம் கட்டமாக கடந்த 27ஆம் திகதி கரூரில் பிரசாரம் செய்தார். அடுத்தடுத்து மற்ற மாவட்டங்களில் பிரசாரம் செய்ய இருந்தார்.

இந்தநிலையில் கரூர் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

Exit mobile version