உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க், தனக்கு 1 ட்ரில்லியன் டாலர் ஊதியம் வழங்க வேண்டும் என டெஸ்லா நிறுவனத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனர்.
எலான் மஸ்க்கின் இந்தக் கோரிக்கை நிறைவேறினால், அவர் உலகிலேயே முதல் ட்ரில்லியன் டாலர் சொத்துக்குச் சொந்தக்காரர் ஆவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தத் தொகை பணமாக அல்லாமல், அடுத்த 10 ஆண்டுகளில் 423.7 மில்லியன் டெஸ்லா பங்குகளாக அவருக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, எலான் மஸ்க்கின் அரசியல் கருத்துகள் டெஸ்லா கார்களின் விற்பனையில் சறுக்கலைச் சந்தித்துள்ளன. ஆனாலும், டெஸ்லா நிறுவனத்தின் பங்கு மதிப்பு மிக அதிகமாகவே இருக்கிறது. இந்தச் சூழலில், எலான் மஸ்க் கோரியுள்ள இந்தக் கூடுதல் சம்பளம் உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

