பிரித்தானியத் தலைநகர் லண்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்த தொடருந்து ஒன்றில் சனிக்கிழமை (நவம்பர் 1) மாலை இடம்பெற்ற பாரிய கத்திக்குத்துத் தாக்குதலில் பத்து பேர் காயமடைந்தனர் எனப் பிரித்தானியக் காவல்துறை தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களில் ஒன்பது பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் டொன்காஸ்டரில் இருந்து லண்டன் கிங்ஸ் கிராஸ் (King’s Cross) நோக்கிச் சென்று கொண்டிருந்த தொடருந்து ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

