25 68fb42eb327aa
செய்திகள்இலங்கை

பாடசாலை நேர நீட்டிப்புக்கு எதிர்ப்பு: ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்ட எச்சரிக்கை!

Share

2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களின்படி, பாடசாலை நேரத்தை 30 நிமிடங்களால் நீடிப்பதற்கு ஆசிரியர் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கக் கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இன்று (அக் 24) கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய ஆசிரியர், அதிபர்கள் சங்கங்கள் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளன.

நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை நேரத்தைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், பாடசாலை தவணை ஆரம்பித்தவுடன் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் முன்மொழியப்பட்ட கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 1 முதல் 6 ஆம் வகுப்பு வரையிலான பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்படும். இது தற்போதைய பிற்பகல் 1:30 மணியிலிருந்து 30 நிமிடங்கள் அதிகமாகும்.

திருத்தப்பட்ட அட்டவணை, நீண்ட 50 நிமிட நேரங்களை அறிமுகப்படுத்துவதன் மூலமும், கொரோனா தொற்றுநோய் போன்ற முந்தைய இடையூறுகளால் இழந்த கல்வி நேரத்தை ஈடுசெய்வதன் மூலமும் கற்றல் சூழலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 202
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு அமைதி முன்னெடுப்பு: உலக நாடுகளின் பாராட்டைப் பெறும் பாகிஸ்தானின் மத்தியஸ்தப் பங்கு!

மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளில் பாகிஸ்தான் ஒரு...

world 201
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அமைதிப் பேரணிக்காக இலங்கை வரும் ‘அலோகா’: விமானத்தில் பயணிகளுடன் பயணிக்கச் சிறப்பு அனுமதி!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சர்வதேச “அமைதிப்...

world 200
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன இலக்கத் தகடுகளில் மாற்றமா? பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

இலங்கையில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுக்குப் புறம்பாக, தரமற்ற மற்றும் வர்ணமயமான வாகனப் பதிவு...

world 197
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்கு ஒரு பேரல் எண்ணெய் $286: உலகளாவிய எரிசக்தி நெருக்கடியில் சிக்கிய தீவு தேசம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எண்ணெய் நெருக்கடி, காகித வர்த்தகத்தைத் தாண்டி...