நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைச் செயலாளராக நாஞ்சில் சம்பத் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த நியமனம் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மக்களுக்கான அரசியலில் தம்மோடு இணைந்து பயணிக்கவிருக்கும் நாஞ்சில் சம்பத்தை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்,” என விஜய் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாஞ்சில் சம்பத், பொதுச் செயலாளர் என். ஆனந்துடன் இணைந்து தன்னுடையப் பணிகளை மேற்கொள்வார் எனவும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
மூத்த அரசியல் பேச்சாளரான நாஞ்சில் சம்பத்தின் இந்த நியமனம், தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நடவடிக்கைகளுக்கு மேலும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.