தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் (SJB) ஒருங்கிணைக்கப்பட்டுள்ள பொது எதிரணியில் இணைவதற்குத் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தீர்மானித்துள்ளது.
இந்தக் கூட்டணியில் இணைவது குறித்துத் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இதன் போது ஜனநாயகத்திற்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சிகளின் பேரணியில் பங்கேற்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்றுக்குழுவும் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் (Nugegoda) ஒரு பாரிய ஆர்ப்பாட்டப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணிகள் அனைத்தும் இந்தப் பேரணியில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.