ஆப்கானில் தலிபான்கள் பாதுகாப்பு அதிகாரிகளை குறி வைப்பதாக மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆப்கானில் கடந்த ஆகஸ்ட் மாதம், அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து, ஆப்கான் முழுவதையும் தலிபான்கள் கைப்பற்றினர்.
தலிபான்கள் ஆட்சி அமைத்த பிறகு, முன்னாள் அதிபர் அஸ்ரப் கானி ஆட்சியின்போது பணிபுரிந்த பாதுகாப்புப் படையினர், காவல்துறையினர் உள்பட அனைத்து அரசு அலுவலர்களுக்கும் பொது மன்னிப்பு அளிப்பதாகத் தலிபான்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தலிபான்கள் ஆட்சி அமைந்த பிறகு மட்டும் ஆப்கான் இராணுவம், காவல்துறையினர், புலனாய்வு அலுவலர்கள் என மொத்தம் 47 பேர் கடத்தப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணையம் கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டது.
இப்பிரச்சனை பெரும் சர்ச்சையை அங்கு கிளப்பியுள்ளது.
ஆப்கானில் முந்தைய ஆட்சியில் பணிபுரிந்த நபர்களைக் குறிவைத்து அவர்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளைத் தலிபான்கள் நிறுத்த வேண்டும் என அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் உலகநாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.
அவ் அறிக்கையில்,
ஆப்கானில் இடம்பெறும் கடத்தல்கள் கடுமையான மனித உரிமை மீறல்கலாகும்.
இக் கடத்தல் நடவடிக்கைகள் தலிபான் அறிவித்த பொது மன்னிப்புக்கு முரணானவை. இந்த நடவடிக்கைகள் தொடருமாயின் தலிபான்கள் மீது கடும் நடவடிக்கைள் எடுக்கப்படுமென உலக நாடுகள் எச்சரித்துள்ளன.
#world