images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

Share

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் மோதின. உலகெங்கும் உள்ள ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்திய அணி 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி, ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. சிறப்பாக விளையாடிய இஷான் கிஷான் 77 ஓட்டங்களைக் குவித்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 175 ஓட்டங்களைப் பெற்றது.

176 ஓட்டங்கள் என்ற சவாலான இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, இந்தியப் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 18 ஓவர்கள் முடிவில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுத் தோல்வியடைந்தது. இதன் மூலம் இந்திய அணி 61 ஓட்டங்களால் வரலாற்று வெற்றியை ஈட்டியதுடன், தொடரில் தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டது.

 

 

 

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...

image 1200x800 34
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சட்டத்தரணி படுகொலை வழக்கு: கைது செய்யப்பட்ட சகோதரர்களுக்கு நாளை வரை தடுப்புக்காவல்! – கடுவலை நீதிமன்றம் உத்தரவு!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவியை சுட்டுக் கொலை செய்த சம்பவத்திற்கு...

image 1200x800 37
உலகம்செய்திகள்

அமெரிக்க ஹொக்கி மைதானத்தில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி! – குடும்பத் தகராறால் நேர்ந்த கொடூரம்!

அமெரிக்காவின் ரோட் ஐலண்ட் (Rhode Island) பகுதியில் உள்ள ஹொக்கி மைதானம் ஒன்றில் அரங்கேறிய துப்பாக்கிச்...

image 1200x800 36
செய்திகள்உலகம்

இம்ரான் கானைக் காப்பாற்ற ஒன்று திரண்ட கிரிக்கெட் நட்சத்திரங்கள்! – கவாஸ்கர், கபில் தேவ் உட்பட 14 ஜாம்பவான்கள் பாகிஸ்தான் பிரதமருக்குக் கடிதம்!

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், 1992-ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த...