சமூகத்தில் எந்தவித அறிகுறிகளும் இல்லாத கொரோனா தொற்றாளர்களே அதிகமாக காணப்படுவதாக வைத்தியர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் ஊடகசந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்,
சமூகத்தில் கொவிட் அறிகுறிகளை காட்டும் தொற்றாளர்களை விட எவ்வித அறிகுறிகளையும் கொண்டிராத கொவிட் தொற்றாளர்களே அதிகளவில் அடையாளம் காணப்பட்டுவருகின்றனர்.
சுகாதார வழிமுறைகளை பின்பற்றுதிலிருந்து தவறும் பட்சத்தில் கொவிட் தொற்று மேலும் பரவலடைந்து நிலைமை மோசமடைவதற்கு வழிவகுக்கக்கூடும்.
இதேவேளை முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்ட நபர்கள் மூன்றாவது தடுப்பூசியையும் கட்டாயம் பெற்றுக்கொள்ள முன்வர வேண்டுமென அவர் பொதுமக்களை கோரியுள்ளார்.
இதன் காரணமாக அனைவரும் ஒன்றிணைந்து முறையாக சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும் என்றார்.
#SrilankaNews
Leave a comment