மீண்டும் யாழ்ப்பாணத்தில் அடுத்தடுத்து வாள்வெட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை மக்கள் மத்தியில் பலத்த பீதியை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம், வடமராட்சி – பருத்தித்துறை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
பருத்தித்துறை – துன்னாலை தக்குசம்பாதி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் படுகாயம் அடைந்த இளைஞர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று திங்கட்கிழமை(10) பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் குறித்த பகுதியை சேர்ந்த பாஸ்கரன் காண்டீபன் (வயது- 27) என்பவரே வெட்டுக் காயங்களுக்கு இலக்கான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை வடக்கிற்கு ஆளுநராக பதவியேற்ற ஜீவன் தியாகராஜா தனது முதலாவது செயற்றிட்டமாக வாள்வெட்டுக்குழுவை ஒடுக்குவது தான் எனவும் யாழில் ஒன்று வாள்வெட்டுக்குழுக்கள் இருக்க வேண்டும் இல்லாவிடில் நான் இருக்கவேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வடக்கிற்கு ஆளுநராக ஜீவன் தியாகராஜா பொறுப்பேற்ற பின்பு வாள்வெட்டுத்தாக்குதல்கள் , குழுத்தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
#SrilankaNews