சுவீடனின் முதல் பெண் பிரதமரின் அதிரடி முடிவு!

Swedish

Swedish

சுவீடன் நாட்டின் புதிய பிரதமர் பதவி விலகியுள்ளார்.

சுவீடனில், புதிதாக ஆட்சிக்க வந்த பிரதமர் மெக்டலெனா அன்டர்சன், பதவி விலகியுள்ளார்.

அந்நாட்டின் முதலாவது பெண் பிரதமாகப் பதவியேற்ற மெக்டலெனா அன்டர்சன், பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே தனது பதவியை இராஜினாமாச்tamilnaad செய்துகொண்டார்.

சமூக ஜனநாயக கட்சியின் தலைவராக அவர் நேற்றையதினம் அறிவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அக்கட்சியில் கூட்டணியாகச் செயற்பட்டிருந்த கட்சியினர் விலகியதுடன், மெக்டலெனா அன்டர்சன் பிரதமராகப் பதவியேற்ற பின்னர் கொண்டுவரப்பட்ட வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது.

இதனையடுத்து அவர் பதவி விலகினார்.

இந்நிலையில் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவராக, தான் மீண்டும் தனித்து ஆட்சியமைப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#world

Exit mobile version