சுவசெரிய அவசர ஊர்திச் சேவை: நவீன தொழில்நுட்பத்துடன் படையணியை 500 ஆக உயர்த்த அரசு திட்டம் – இந்திய அரசு, ADBயிடம் உதவி!

1990 520585

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுவசெரிய அவசர நோயாளர் காவு வண்டி (Ambulance) படையணியின் எண்ணிக்கையை 500 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

சுவசெரிய நிதியத்தின் அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்களின் திறன் மேம்பாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட பயிற்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்குத் தேவையான திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், உலகில் கிடைக்கும் சமீபத்திய தொழில்நுட்பத்தை இணைத்து இந்த நோயாளர் காவு வண்டி சேவையை புதுமைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

படையணியை விரிவுபடுத்தும் நோக்கில், கூடுதல் நோயாளர் காவு வண்டிகளைப் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது.100 நோயாளர் காவு வண்டிகளை வாங்குவதற்கு இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

கடன் உதவியின் கீழ் 20 நோயாளர் காவு வண்டிகளையும், அனபளிப்பாக மேலும் 25 நோயாளர் காவு வண்டிகளையும் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

Exit mobile version