வீட்டில் சித்திரவதை பொலிஸில் சரண்!!

20220308 165928

தாய், தந்தையர்கள் தன்னை சித்திரவதை செய்கின்றனர் என சிறுமியொருவர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மதுபோதையில் வரும் தந்தை தாயுடன் சண்டை பிடிப்பதாகவும் இருவராலும் தான் வீட்டில் நின்மதியாக இருக்க முடியவில்லை என குறித்த மாணவி அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமியின் தந்தை மதுபோதையில் வந்து தாயாருடன் தினம்தோறும் சண்டை இடுகின்றார்.

இதனால் தன்னுடன் ஒவ்வொரு நாளும் வாக்குவாதத்திலும் சண்டையிலும் ஈடுபடுவதாகவும் தெரிவித்த சிறுமி, இன்றைய தினம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

7ஆம் தரத்தில் கல்வி கற்கும் 12 வயதுடைய குறித்த சிறுமி நீண்ட நாட்களாக தந்தையின் சித்திரவதையைப் பொறுக்கமுடியாது இன்றையதினம் தஞ்சம் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தஞ்சமடைந்த குறித்த சிறுமியை கோப்பாய் பிரதேச செயலக நன்னடத்தை பிரிவினரிடம் அச்சுவேலிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

#SrilankaNews

 

 

Exit mobile version