25 6925b05262fce
செய்திகள்அரசியல்இலங்கை

சஜித்தின் ‘தேசியப் பிரச்சினை’ பேச்சு: தமிழ் அரசு உறுப்பினர் எஸ். சிறீதரன் கண்டனம்!

Share

திருகோணமலையில் எழுந்துள்ள புத்தர் சிலை விவகாரத்தை ‘தேசியப் பிரச்சினை’ என்று வர்ணித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜீத் பிரேமதாசவின் நிலைப்பாட்டை, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் கடுமையாக விமர்சித்துள்ளார். சஜீத் பிரேமதாசவை ஜனாதிபதியாக்கத் தமிழ்த் தலைவர்கள் முயற்சித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று (நவம்பர் 25, 2025) இது குறித்துக் கருத்துத் தெரிவித்த எஸ். சிறீதரன் பின்வருமாறு கூறினார்:

“திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை தேசியப் பிரச்சினை என்று சொன்ன சஜீத் பிரேமதாசவை, எங்களில் சிலர் ஜனாதிபதியாக்க மூன்று காலில் நின்றார்கள். சஜீத் பிரேமதாசவின் உள்ளத்தில் என்ன இருக்கிறது என்பதும் உண்மை முகமும் தற்போது வெளிவந்துள்ளது.”

“சஜீத் மட்டுமல்ல, அவருக்குப் பின்னால் வால் பிடித்தவர்களும் தமிழ் மக்களிடத்தில் மன்னிப்புக் கோர வேண்டும். இதுதான் வரலாறு.”

புத்தர் சிலையை நிறுவியதன் பின்னணி மற்றும் அதன் நோக்கம் குறித்துப் பேசுகையில்:

“முன்னதாக விகாரையைச் சேர்ந்தவர்கள் ஹோட்டல் அமைக்கவும், அதில் வருமானமீட்டவும் பிக்குகளும் அவர்களுடன் இணைந்த அணியினரும் நினைத்திருப்பார்கள். சட்ட நடவடிக்கை வந்ததும் உணர்வுகளைத் தூண்ட வேண்டியது புத்தர் சிலை தானே.”

“சட்டத்துக்கு முரணாக மாநகர சபையின் சட்டங்களை மீறி பலாத்காரமாக மீறி எதைச் செய்தாலும் அதனைத் தடுக்க வேண்டும். சட்டத்தை முதலில் மதிக்க வேண்டும். பிக்குகளாக இருந்தாலும், சிங்கள மக்களாக இருந்தாலும் சட்டத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதுதான் மிக முக்கியம்.”

“இது ஒரு ஆக்கிரமிப்பு என்பதை வெளியில் குரல் கொடுத்தவர்கள் சம்பவ இடத்தில் குரல் கொடுத்தவற்றை வைத்துப் பார்க்கின்றபோது புரிகிறது. இப்படிச் சொல்லிய சொல்லியே ஒவ்வொரு இடத்திலும் புத்தர் சிலையை வைத்து புத்தர் அடையாளம் என்று கூறி, பிறகு அந்த இடம் தங்களுக்குச் சொந்தமானது என்று கூறுவார்கள்” என்றார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...