பிரபல ஊடகவியலாளர் மீது தற்கொலைத் தாக்குதல்!

thumbs b c cb55976406622286820f6535d9a9803c

journalist in Somalia

பிரபல ஊடகவியலாளர் மீது சோமாலியாவில் தற்கொலைத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

சோமாலியா தலைநகர் மொகடிஷூவில் பிரபல ஊடகவியலாளர் ஒருவரை குறிவைத்து தற்கொலை குண்டுதாரியினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது அவர் கொல்லப்பட்டார்.

அப்டியாஸ் அஃப்ரிக்கா என அழைக்கப்படும் அவர், தீவிரவாத ஆயுத குழுவான அல்-ஷாபாப்பின் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்டித்து வந்ததுடன், அது குறித்து பல தகவல்களை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் மீது இத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலின்போது மேலும் இருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதல் குறித்து அல்-ஷபாபே தீவிரவாத அமைப்பின் பேச்சாளர் வெளியிட்ட அறிக்கையில்,

குறித்த ஊடாகவியலாளர் மொகடிஷூ வானொலியுடன் இணைந்து தமக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தமைக்கு பழிவாங்கும் நோக்கிலேயே இந்தத் தற்கொலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது மிலேசத்தனமான பயங்கரவாத நடவடிக்கை என சோமாலிய பிரதமர் மொகமட் ஹூசீன் ரோபில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் இராணுவ ஒத்துழைப்புடன் செயல்படும் சோமாலிய அரச படைகளுடன் கடந்த ஒரு தசாப்தகாலமாக அல்-ஷாபாப் ஆயுதக்குழு மீது தாக்குதலை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#world

Exit mobile version