கர்ப்பகால கொவிட்-19 தொற்று: குழந்தைகளுக்கு நரம்பியல் வளர்ச்சிக் கோளாறுகள் ஏற்படும் அபாயம் அதிகம் – ஆய்வில் தகவல்!

112884270 gettyimages 874899752

கர்ப்ப காலத்தில் கொவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள், மூன்று வயதை அடையும்போது நரம்பியல் வளர்ச்சிக் கோளாறுகளால் (Neurodevelopmental Disorders) பாதிக்கப்படும் அபாயம் அதிகமாக உள்ளதாக அமெரிக்காவின் மாஸ் ஜெனரல் பிரிகாம் (Mass General Brigham) ஆராய்ச்சியாளர்கள் நடத்திய புதிய ஆய்வு எச்சரித்துள்ளது.

கர்ப்ப காலத்தில் கொவிட் தொற்று ஏற்பட்டால், குழந்தைகளுக்குப் பேச்சுத் தாமதம் (Speech Delay), ஓட்டிசம் (Autism) மற்றும் உடல் அசைவுக் கோளாறுகள் (Motor Disorders) ஏற்படுவதற்கான வாய்ப்பு, மற்ற குழந்தைகளை விட 29 சதவீதம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் நோயெதிர்ப்புச் செயல்பாடு (Immune Response), கருவின் மூளை வளர்ச்சியைக் சீர்குலைப்பதே இதற்குக் காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கர்ப்பத்தின் கடைசி மூன்று மாதங்களில் (Last Trimester) தொற்று ஏற்பட்டால், குழந்தைக்கு அதிக ஆபத்து இருப்பதாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

இந்தக் கண்டுபிடிப்புகள், கர்ப்பிணிப் பெண்கள் கொவிட்-19 தொற்று ஏற்படாமல் தடுப்பதன் முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்துகின்றன.

Exit mobile version