கெரவலப்பிட்டி யுகதனி மின்னுற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகள் அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சபையால் போராட்டம் நடாத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், இப்போராட்டத்தில் இலங்கை மின்சார சபை சங்கத்தின் தலைவர் சௌமய குமாரவடு இலங்கை மின்சார சபையின் பொறியிலாளர் சங்கத்தின் எதிர்ப்பு போராட்டம் கடுமையாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவிக்கையில்,
எதிர்வரும் நாட்களில் ஏற்படும் மின்சார துண்டிப்புக்களை வழமைக்கு கொண்டுவர முடியாத நிலை உருவாகும்.கெரவலப்பிட்டி யுகதனி மின்னுற்பத்தி நிலைய ஒப்பந்தத்திற்கு எதிரான மனு எதிர்வரும் 29ஆம் திகதி பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவர் கொண்ட ஆயத்தில் அழைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது என்பதையும் தெரிவித்தார்.
#SriLankaNews

