இறுதிப் போரில் சரணடைந்த ஆயிரக்கணக்கானோர் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் அவர்களின் உறவுகள் தங்கள் வீடுகளில் இருந்தவாறு அடையாள கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் கடைப்பிடிக்கும் முகமாக இது மேற்கொள்ளப்படுகிறது.
கொவிட் 19 பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக தத்தமது வீடுகளிலிருந்தவாறே சர்வதேசத்திடம் நீதி கோரி இந்த கவனவீர்ப்பு போராட்டத்தை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் பொது இடத்தில் ஒன்றுகூடி மிகப்பெரும் அளவில் கவனவீர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளும் உறவுகள் தற்போதைய சூழ்நிலையில் தமது வீடுகளில் நீதி கோரிய வாசகங்களை தாங்கி மெழுகுதிரி ஏந்தி பேராட்டத்தை முன்னெடுத்தள்ளனர்.
‘‘நாங்கள் இந்த அரசை நம்பவில்லை. சர்வதேச விசாரணையே வேண்டும்’’, ‘‘இராணுவத்தை நம்பி கையளித்தவர்கள் எங்கே? எவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டார்கள்? ’’ ‘‘ நீதி விசாரணையே வேண்டும்’’ போன்ற வாசகங்களை தாங்கி இந்தத் தினத்தை அடையாளப்படுத்தி கவனவீர்ப்பை மேற்கொண்டுள்ளனர்.