தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கமானது பூமிக்கு அடியில் 11.9 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் அதிர்வுகள் காரணமாகத் தலைநகர் தைபேவில் (Taipei) உள்ள வானளாவிய கட்டடங்கள் கடுமையாகக் குலுங்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி உயிரிழப்புகள் அல்லது பாரிய சேதங்கள் குறித்த உடனடித் தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.