இலங்கையில் தெரு நாய்கள் 3 மில்லியனாக அதிகரிப்பு – அபாயம்!

Dogs

இலங்கையில் தெரு நாய்களின் எண்ணிக்கை அபாயகரமாக உயர்வடைந்துள்ளதாக இலங்கை விலங்குகள் நலச்சங்கம் எச்சரித்துள்ளது. தற்போதைய நிலையில், தெரு நாய்களின் எண்ணிக்கை இரண்டு மில்லியன் முதல் மூன்று மில்லியன் வரை அதிகரித்துள்ளதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

தற்போது இலங்கையில் ஒவ்வொரு எட்டு மனிதர்களுக்கும் ஒரு தெரு நாய் என்ற சதவீதத்தில் அதன் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக விலங்கு நலன் மூலம் சமூகப் பாதுகாப்பிற்கான கண்டிச் சங்கத்தின் செயலாளர் சம்பா பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார். இதற்குக் காரணம், பெண் நாய்கள் ஆண்டுக்கு இரண்டு முறை குட்டி ஈனுவதே ஆகும்.

இந்த அபரிமிதமான அதிகரிப்பால், ஒவ்வொரு வருடமும் சுமார் 250,000 தெரு நாய்க்கடி சம்பவங்கள் பதிவாவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும் போது சம்பா பெர்னாண்டோ இந்த அதிர்ச்சித் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version