2026-ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ அரச வெசாக் (State Vesak Festival) நிகழ்வை மே மாதம் 30-ஆம் திகதி நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன வெளியிட்டுள்ளார்.
இந்தத் தீர்மானம் குறித்து மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நிகாயக்களின் மகாநாயக்க தேரர்கள் விடுத்த கோரிக்கையை ஆராய்ந்த போயா குழுவின் (Poya Committee) பரிந்துரையின் அடிப்படையில் இந்தத் திகதி இறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் ஆலோசனையின் பேரில் போயா குழு கூடி, வானியல் மற்றும் மத ரீதியான காரணிகளை ஆராய்ந்த பின்னரே மே 30-ஆம் திகதிக்கு இணக்கம் வெளியிட்டுள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இதன்படி, 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய வெசாக் கொண்டாட்டங்கள் மே மாத இறுதியில் மிக விமர்சையாக நடைபெறவுள்ளன.