இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் (SPMC) தனது வரலாற்றில் அதிகூடிய மருந்து உற்பத்தியை 2025-ஆம் ஆண்டில் மேற்கொண்டுள்ளதாகச் சுகாதார மற்றும் ஊடக அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டில் மொத்தம் 3,625 மில்லியன் மாத்திரைகள் மற்றும் குளிசைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
வரலாற்றிலேயே ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிகூடிய உற்பத்தியும் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே பதிவாகியுள்ளது. அந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 385 மில்லியன் மாத்திரைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
2025-ஆம் ஆண்டில் இக்கூட்டுத்தாபனத்தின் மொத்த வருமானம் 27.06 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மருத்துவ வழங்கல் பிரிவினால் கோரப்பட்ட அனைத்து மருந்து முன்பதிவுகளையும் எவ்விதத் தட்டுப்பாடும் இன்றி விநியோகித்து இக்கூட்டுத்தாபனம் சாதனை படைத்துள்ளது. 2025-ஆம் ஆண்டில் மாத்திரம் 05 புதிய வகை மருந்துகள் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
உள்நாட்டு மருந்து உற்பத்தியை ஊக்குவித்து, வெளிநாடுகளிலிருந்து மருந்துகளை இறக்குமதி செய்வதற்காகச் செலவிடப்படும் அந்நியச் செலாவணியைச் சேமிக்கும் அரசாங்கத்தின் இலக்கை எட்டுவதில் இக்கூட்டுத்தாபனம் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.