இலங்கை முழுவதும் அவசரகால நிலை தொடர்ந்தும் நீடிப்பு: ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

anura 3

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகள் மற்றும் நிலவும் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட பொது அவசரகால நிலை (Public Emergency) தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகியுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க, இக்கட்டளைச் சட்டத்தின் இரண்டாம் பாகம் இலங்கை முழுவதற்கும் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியைப் பாதுகாத்தல் மற்றும் அத்தியாவசிய சேவைகளை எவ்வித தடையுமின்றி தொடர்ச்சியாகப் பேணுதல் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதே இந்த தீர்மானத்தின் பிரதான நோக்கமாகும்.

பேரழிவைத் தொடர்ந்த மீட்புப் பணிகள் மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நிர்வாகக் கட்டமைப்புகளை வலுப்படுத்த இந்த அவசரகால நிலை நீடிப்பு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Exit mobile version