சிறிலங்கன் ஏர்லைன்ஸ்: கடன் மறுசீரமைப்பை இம்மாதம் முடிக்கத் திட்டம் – தனியார்மயமாக்கல் அவசியமற்றது என்கிறார் பிரதி அமைச்சர்!

26 695b676567809

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனத்தின் கடன் மறுசீரமைப்புப் பணிகளை இந்த மாத இறுதிக்குள் நிறைவு செய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாகத் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை பிரதி அமைச்சர் ஜனிதா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், தேசிய விமான நிறுவனத்தின் தற்போதைய நிதி நெருக்கடி குறித்து அவர், நிறுவனத்திடம் மிக அதிக அளவிலான கடன் நிலுவையில் உள்ளது. இதனால் தற்போதைய நிலையில் தனியார் துறையுடன் கூட்டாண்மையை ஏற்படுத்துவது சாத்தியமற்றது.

விமானக் குழுவில் உள்ள அனைத்து விமானங்களும் குத்தகை அடிப்படையிலேயே (Leased) பெறப்பட்டுள்ளன. “இவ்வளவு பெரிய கடன் சுமை கொண்ட ஒரு நிறுவனத்தை வாங்குவதற்கு எவரும் முன்வரமாட்டார்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடன் மறுசீரமைப்பு முடிந்த பிறகு நிறுவனத்தின் எதிர்காலம் குறித்துப் பேசுகையில், கடன் சுமைகள் குறைக்கப்பட்டால், விமான நிறுவனத்தைத் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் இருக்காது. முறையான மறுசீரமைப்பிற்குப் பிறகு, சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை மீண்டும் இலாபகரமாக இயக்கும் நிலைக்குக் கொண்டுவர முடியும் என அரசாங்கம் உறுதியாக நம்புகிறது.

இந்தக் கடன் மறுசீரமைப்புத் திட்டம் வெற்றியடைந்தால், இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Exit mobile version