இலங்கையில் முதலாவது கொவிட் அபராதம் விதிக்கப்பட்டது!!

1638987600 court 2

இலங்கையில் கொவிட்டின் மாறுபாடான ஒமிக்ரோன் வைரஜட பரவலடையும் வகையில் செயற்பட்டமைக்காக பெண்ணொருவருக்கு நீதிமன்றம் அபராதம் வழங்கியுள்ளது.

மாரவில பிரதேசத்தை சேர்ந்த பெண் மற்றும் அவரது கணவர் ஆகியோர் தென்னாபிரிக்கா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர்.

இதன்போது இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒமிக்ரோன் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து பொது சுகாார பரிசோதகர்களால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ப்பட்ட குற்றச்சாட்டிற்கமைய கொவிட் தொற்றியுள்ளமை குறித்து அறிவிக்காத குற்றச்சாட்டின் கீழ் மாரவில நீதிமன்றத்தினால் 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த இருவரும் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாமல் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

 

 

Exit mobile version