இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் சிம்பாப்வே அணிக்கான 18 பேர் கொண்ட இலங்கையணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அனுபவ வீரர்களான வனிந்து ஹசரங்க மற்றும் குசல்பெரேரா ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை.
இவர்களுக்கு பதிலாக அறிமுக வீரர்களாக எல்.பி.எல் போட்டிகளில் சிறந்த அறிமுகத்தை வழங்கிய கமில் மிஷ்ரா, ஜனித் லியனகே, நுவான் துஷாரா ஆகிகோருக்கு அணியில் இடம்வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அவிஷ்க பெர்ணான்டோ கொரோனா தொற்றிலிருந்து மீளாத பட்சத்தில் அவருக்கு பதிலாக குசல் மென்டிஸ் விளையாடுவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி இலங்கை குழாத்தில் சகல துறை துடுப்பாட்ட வீரர்களாக அணித்தலைவர் தசுன் சானக,குசல் மென்டிஸ், பெதும் நிசங்க, தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்க , மினோத் பாணுக, சாமிக கருணாரத்னே, ஜனித் லியனகே, கமில் மிஸ்ரா ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
சுழற்பந்து வீச்சாளர்களாக ஜெப்ரி வன்டர்சே, ரமேஷ் மென்டிஸ், பிரவீன் ஜயவிக்ரம, மகேஸ் தீக்சன ஆகியோரும் வேகப்பந்து வீச்சாளர்களாக துஸ்மந்த சமீர, லகிரு குமார, நுவான் துசார, சம்மிக்க குணசேகர, கலன பெரேரா ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
#SportsNews