இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் கடற்கரைப் பகுதியொன்றில் நேற்று இரவு இலங்கைத் தொழிலாளி ஒருவர் ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டவர் காலி, படபொல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது. இவர் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் வேலைக்காகச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் மோதலாக மாறியதன் காரணமாகவே, அந்த நபர் இலங்கையரைக் கொலை செய்துள்ளதாக அங்குள்ள இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகநபரை கைது செய்வதற்காக இஸ்ரேல் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.