russia cancer vaccine news 2024 12 46d8f70b525bd47d7c40b1fc71788a65 3x2 1
செய்திகள்இலங்கை

ரஷ்ய புற்றுநோய் தடுப்பூசி குறித்து இலங்கை சுகாதார அதிகாரிகள் கடுமையான எச்சரிக்கை

Share

ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசியான ‘என்டோரோமிக்ஸ்’ (Enteromix), புற்றுநோயைக் குணப்படுத்தும் என்ற தகவலை இலங்கை சுகாதார அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

இந்தத் தடுப்பூசி இன்னும் ஆரம்பக்கட்ட பரிசோதனை நிலையிலேயே (pre-clinical stage) இருப்பதாகவும், அறிவியல் ரீதியான சரிபார்ப்பு மூலம் அதன் செயற்திறன் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

என்டோரோமிக்ஸ் தடுப்பூசி “100 சதவீதம் புற்றுநோயைக் குணப்படுத்தும்” என்று கூறி வைரலாகப் பரவும் பதிவுகள் மற்றும் சர்வதேச அறிக்கைகளுக்கு மத்தியில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் சிகிச்சையில் எந்தவொரு முன்னேற்றமும் வரவேற்கத்தக்கது என்றாலும், இந்தத் தடுப்பூசி இன்னும் ஆரம்பக் கட்ட வளர்ச்சியில் தான் உள்ளது என சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன் செயற்திறன் குறித்து எந்த முடிவுகளையும் எடுப்பதற்கு முன், இது சரியான புற்றுநோயியல் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...