1768450480 israel 6
செய்திகள்உலகம்

இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனத் தூதரகம் அறிவுறுத்தல்!

Share

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் விசேட ஆலோசனைக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தூதரகம் வழங்கியுள்ள முக்கிய அறிவுறுத்தல்கள், மூக ஊடகங்கள் மற்றும் பல்வேறு குழுக்களால் பகிரப்படும் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கண்டு தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையையும் கட்டுப்படுத்த இஸ்ரேலிய இராணுவம் (IDF) போதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏவுகணைத் தாக்குதல்கள் அல்லது வேறு அச்சுறுத்தல்கள் ஏற்படும் பட்சத்தில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடைமுறைகளை (பாதுகாப்பு அறைகளுக்குச் செல்லுதல் போன்றவை) முறையாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய உத்தியோகபூர்வ ஊடகங்கள் மற்றும் பாதுகாப்புத் துறையினரால் வழங்கப்படும் உடனுக்குடனான அறிவிப்புகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தைப்பொங்கல் பண்டிகை மற்றும் இஸ்ரேலிய வார இறுதி விடுமுறை காரணமாக, இன்று முதல் மூன்று நாட்களுக்கு (ஜனவரி 15-17) இலங்கைத் தூதரகம் மூடப்பட்டிருக்கும். இருப்பினும், ஏதேனும் எதிர்பாராத அவசர நிலை ஏற்பட்டால் உடனடியாகத் தூதரகம் திறக்கப்பட்டு சேவைகள் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...