Boat 2 1 e1478846009492
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் சுற்றுலாத்துறை எழுச்சி: 15 நாட்களில் 1.3 இலட்சம் பயணிகள் வருகை – முதலிடத்தில் இந்தியா!

Share

2026 ஆம் ஆண்டின் ஆரம்பமான முதல் 15 நாட்களுக்குள் 131,898 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதிக்குள், ஒரே நாளில் அதிகளவான சுற்றுலாப் பயணிகளின் வருகை ஜனவரி 15 ஆம் திகதி பதிவாகியுள்ளதுடன், அன்றைய தினம் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10,483 ஆகும் எனவும் அதிகார சபை கூறுகிறது.

இந்த 15 நாட்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடாக இந்தியா விளங்குவதுடன், அந்த எண்ணிக்கை 23,786 ஆகப் பதிவாகியுள்ளது.

அதற்கு மேலதிகமாக, ரஷ்யாவிலிருந்து 14,785 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 12,166 பேரும் மற்றும் ஜெர்மனியிலிருந்து 9,260 பேரும் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...