சைபர் குற்றங்களுக்கு எதிரான ஐ.நா. மாநாட்டில் இலங்கை கையெழுத்து: பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை நிறுவ நடவடிக்கை!

676e77e8fd6e686c38a65600 UN Convention Against Cybercrime scaled 1

சைபர் குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் (UN Convention Against Cybercrime) இலங்கை உத்தியோகபூர்வமாகக் கையெழுத்திட்டுள்ளது.

இந்த மாநாடு, சைபர் குற்றங்களுக்கு எதிரான சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும், பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை நிறுவுவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

இலங்கை சார்பான ஆவணத்தில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பதில் செயலாளர் வருண ஸ்ரீ தனபால கையெழுத்திட்டுள்ளார். இந்த ஒப்பந்தத்தின்படி, இலங்கை மூன்று மாதங்களுக்குள் அமைச்சுகளுக்கு இடையேயான பொறிமுறை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது.

இதனிடையே, இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு , சைபர் குற்றங்களைத் தடுப்பதற்கான தேசிய மையப் புள்ளியாக நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை மூலம், சைபர் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை சர்வதேச அரங்கில் தனது உறுதிப்பாட்டை நிலைநாட்டியுள்ளது.

Exit mobile version