இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையின் ஒரு அங்கமாக, ஜேர்மனிய கூட்டாட்சி குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு ஒப்பந்தம் ஒன்று இன்று (07) கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் சுமார் 188 மில்லியன் யூரோக்கள் பெறுமதியான கடன் தொகை மறுசீரமைக்கப்படவுள்ளது.
இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுத்தல் மற்றும் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு வலுசேர்த்தல்.
உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடனான (Official Creditor Committee) புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் எட்டப்பட்ட இந்த இணக்கப்பாடு இலங்கைக்குப் பாரிய கடன் நிவாரணத்தை வழங்கும்.
“இந்த ஒப்பந்தமானது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் பலப்படுத்துவதுடன், ஜேர்மனி வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பிற்கு இலங்கை தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது” என நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

