1618818926 police 2
செய்திகள்அரசியல்இலங்கை

நத்தார் மற்றும் புத்தாண்டு: நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டம் அமல்!

Share

எதிர்வரும் நத்தார் பண்டிகை மற்றும் 2026 புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சீரான போக்குவரத்து சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நத்தார் தின விசேட ஆராதனைகளை முன்னிட்டு, அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் மதத் தலைவர்களுடன் ஒருங்கிணைந்து பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

நகரப்பகுதிகள் மற்றும் நிதி நிறுவனங்கள்: பொதுமக்கள் அதிகம் கூடும் பிரதான நகரங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் நிதி நிறுவனங்களை மையப்படுத்தி விசேட ரோந்துப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

புலனாய்வு மற்றும் சிவில் உடையில் பொலிஸார்: குற்றச் செயல்களைத் தடுக்கவும், சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்களைக் கண்காணிக்கவும் நகரங்களைச் சுற்றி புலனாய்வு அதிகாரிகள் மற்றும் சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் தங்கும் ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான நபர்கள், வாகனங்கள் அல்லது பொதிகள் குறித்து அவதானமாக இருக்குமாறும், ஏதேனும் தகவல் இருப்பின் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தருக்கோ அல்லது பொலிஸ் நிலையத்திற்கோ அறிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு இலங்கை பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...