tsunami 750x375 1
செய்திகள்இலங்கை

சுனாமி பேரழிவின் 21-ஆம் ஆண்டு நினைவேந்தல்: நாளை 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அழைப்பு!

Share

இலங்கையை உலுக்கிய சுனாமி பேரழிவு ஏற்பட்டு நாளையுடன் (டிசம்பர் 26) 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் நினைவேந்தல் நிகழ்வுகளும், தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கருகில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உருவான சுனாமி பேரலையினால், இலங்கையில் 35,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், சுமார் 5,000 பேர் காணாமல் போயினர். இந்தத் துயரச் சம்பவத்தை நினைவுகூரும் வகையில் 2005 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 26 ஆம் திகதி ‘தேசிய பாதுகாப்பு தினமாக’ அறிவிக்கப்பட்டது.

இம்முறை பிரதான நினைவேந்தல் நிகழ்வு நாளை காலை பெரலிய சுனாமி நினைவுத் தூபிக்கு அருகில் நடைபெறவுள்ளது.

அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், நாளை காலை 9:25 மணி முதல் 9:27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சுனாமி மட்டுமன்றி, அண்மைய வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களுக்காகவும் மாவட்ட ரீதியாகச் சர்வ மத வழிபாட்டு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.

இயற்கை அனர்த்தங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதுகாப்பு நடைமுறைகளை நினைவூட்டவும் இந்தத் தேசிய பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...