14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

Share

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இதன்படி, ஜனவரி இறுதியில் நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. சீன மக்கள் வங்கியுடனான நாணயப் பரிமாற்று வசதி (Swap facility) இதனுள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் சாதகமான போக்குகள் காணப்படுகின்றன. சுற்றுலாத்துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பதிவாகியுள்ள நிலையில், 378 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. அதேவேளை, வெளிநாட்டுத் தொழிலாளர்களால் அனுப்பப்பட்ட பணப்பரிமாற்றம் ஜனவரியில் 751 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 31.1 சதவீத குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.

இருப்பினும், வாகன இறக்குமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2025 டிசம்பர் மாதத்தில் 301 மில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்பட்ட வாகன இறக்குமதி, 2026 ஜனவரியில் 224 மில்லியன் அமெரிக்க டொலராகக் குறைவடைந்துள்ளது. இதற்கிடையில், அரசாங்க பிணையங்கள் சந்தையில் 17 மில்லியன் அமெரிக்க டொலர் தேறிய முதலீடுகள் உள்வருகையாகப் பதிவாகியுள்ளன. ஆனால், கொழும்பு பங்குச்சந்தையில் 22 மில்லியன் அமெரிக்க டொலர் தேறிய வெளிச்செல்லலாகப் பதிவாகியுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...

10 4
உலகம்செய்திகள்

ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல்: பதற்றத்தைக் குறைக்க இந்தியா வலியுறுத்தல்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானில் உள்ள ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ள...

09 5
செய்திகள்விளையாட்டு

ஈரான் பதற்றம் எதிரொலி: டி20 உலகக் கோப்பைக்காக ஐசிசி அவசரகாலத் திட்டங்களைச் செயல்படுத்தியது!

ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில், ஐசிசி உறுப்பு...