மல்யுத்த வரலாற்றில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான WWE ஜாம்பவான் ஜோன் சினா, தனது புகழ்பெற்ற இரண்டு தசாப்த கால வாழ்க்கையின் கடைசி இன்-ரிங் (In-Ring) போட்டியை நாளை (டிசம்பர் 14) எதிர்கொள்ள உள்ளார்.
Saturday Night’s Main Event இன் மெயின் ஈவென்ட்டில் நடைபெறும் இந்தப் போட்டியில், ஜோன் சினா குந்தரை (GUNTHER) எதிர்கொள்வார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தப் போட்டியானது ஜோன் சினாவின் புகழ்பெற்ற 20 ஆண்டுகால வாழ்க்கையின் உச்சக்கட்டத்தைக் குறிக்கிறது.
ஜோன் சினாவின் இறுதிப் போட்டிக்கான எதிர்ப்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட “Last Time Is Now” என்ற சிறப்புப் போட்டியில் குந்தர் வெற்றி பெற்றதன் மூலம், அவர் சினாவுடன் மோதவுள்ளார்.
போட்டி நாளை (டிசம்பர் 14) இரவு 8:00 மணிக்குத் தொடங்கும். இலங்கையர்கள் இந்தப் போட்டியை எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி காலை 6:30க்குக் காணலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.