உலகக்கோப்பை ஹாக்கி போட்டி தள்ளி வைக்கப்பட்டது.
தென்னாப்பிரிக்காவில் இடம்பெறவிருந்த சர்வதேச இளையோர் பெண்கள் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி ஒமிக்ரான் பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்டஒமிக்ரான் பரவலைத் தடுக்க உலக நாடுகளும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்ற நிலையில் சர்வதேச இளையோர் பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அத்தோடு ஒமிக்ரான் பரவலைத் தடுக்க பல நாடுகள் தென்னாப்பிரிக்காவை சிவப்பு பட்டியலில் சேர்த்தமை குறிப்பிடத்தக்கது.
#SPORTS