இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி, தனது 2026-ம் ஆண்டு புத்தாண்டை மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் குடும்பத்தினருடன் டுபாயில் கோலாகலமாகக் கொண்டாடியுள்ளார்.
புத்தாண்டு பிறந்தவுடன் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த முதல் பதிவு இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
இந்த புகைப்படத்தில் விராட் கோலி ஸ்டைலான ஊதா நிற கோட்டும் (Purple Coat), அனுஷ்கா சர்மா நேர்த்தியான கருப்பு நிற உடையும் அணிந்து காட்சியளிக்கின்றனர். “கிங் அண்ட் குயின்”, “மிகவும் அழகான ஜோடி” என ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு லட்சக்கணக்கான கமெண்ட்டுகளைக் குவித்து வருகின்றனர்.
புத்தாண்டு தினத்திற்கு முன்னதாக விராட் கோலி பகிர்ந்த மற்றொரு புகைப்படம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. அந்தப் புகைப்படத்தில் விராட் கோலியின் முகத்தின் ஒருபுறத்தில் ஸ்பைடர் மேன் உருவமும், அனுஷ்கா சர்மாவின் கண்களைச் சுற்றி அழகான வண்ணத்துப் பூச்சியும் வரையப்பட்டிருந்தது.
அந்தப் பதிவில், “என்னுடைய வாழ்வின் ஒளியுடன் (Anushka) 2026-ம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கிறேன்” என விராட் கோலி உருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது இந்திய அணியின் போட்டிகளில் இருந்து சிறிய இடைவெளி எடுத்துள்ள விராட் கோலி, தனது குடும்பத்துடன் நேரத்தைச் செலவழித்து வருவதை இந்தப் புகைப்படங்கள் உறுதிப்படுத்துகின்றன.

