இந்தியா-தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர் தோல்வி: கம்பீரின் எதிர்காலம் குறித்த கேள்விக்குக் கம்பீர் பதில்! 

11908 31 10 2024 12 33 27 3 DSC 4882

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைச் சொந்த மண்ணில் இந்தியா 2-0 என்ற கணக்கில் இழந்துள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று தென் ஆப்பிரிக்கா சாதனை படைத்த நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் (Gautam Gambhir) எதிர்காலம் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

தோல்வியின் பின்னணி
இந்தியா சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 3-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்திருந்தது.

தற்போது தென் ஆப்பிரிக்காவிடம் தொடரை இழந்ததால், அணி நிர்வாகம் மற்றும் பயிற்சியாளரின் செயல்பாடு குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பயிற்சியாளராக அவரது எதிர்காலம் குறித்த கேள்விகளுக்குக் பதில் அளித்த கவுதம் கம்பீர் “இதை முடிவு செய்ய வேண்டியது பிசிசிஐ (BCCI) தான். நான் முன்பே சொன்னேன். இந்திய கிரிக்கெட் முக்கியம். நான் முக்கியமில்லை. இங்கிலாந்து மண்ணில் டெஸ்டில் நன்றாக விளையாடிய போதும், சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பை போன்றவற்றை வென்றபோதும் இதே கம்பீர்தான் பயிற்சியாளராக இருந்தேன். இது கற்றுக்கொண்டிருக்கும் ஒரு அணி (This is a team that is learning)” என்று அவர் கூறினார்.

தொடர் தோல்வி குறித்துப் பேசிய அவர், தனிப்பட்ட முடிவுகளை விட இந்திய கிரிக்கெட்டின் நலனே முக்கியம் என்றும், இந்த அணி அனுபவம் பெற்று வருவதாகவும் கருத்துத் தெரிவித்தார்.

Exit mobile version