FB IMG 1642888277168
செய்திகள்விளையாட்டு

இளையோர் உலகக்கிண்ணம் அரையிறுதியில் இலங்கை!!

Share

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் லீக் பியேஒவ் சுற்றின் முதலாவது அரையிறுதி போட்டியில் இலங்கை அணி 65 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க 19 வயதுக்குட்பட்ட அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.

அன்டிகுவாவில் அமைந்துள்ள சேர் விவேயின் றிச்சர்ட்ஸ் அரங்கில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி 6 விக்கெட் இழப்புக்கு 232 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி சார்பில் துனித் வெள்ளாளகே 113 ஓட்டங்களையும், சோமரத்ன 57 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

233 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க 19 வயதுக்குட்பட்ட அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 167 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

தென்னாபிரிக்க 19 வயதுக்குட்பட்ட அணி சார்பில் மாரி 44 ஓட்டங்களையும், றொனன் 34 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இதற்கமைய போட்டியின் சிறப்பாட்டக்காரராக துனித் வெல்லாலகே தெரிவு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் 5 ஆவது இடத்தை தீர்மானிப்பதற்கான பிளேஒவ் போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 11
உலகம்செய்திகள்

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர் காஷ்மீரில் தாக்குதல்.. பாகிஸ்தான் மறுப்பு தெரிவிப்பு

இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக இந்தியா கூறியதை பாகிஸ்தான் அரசாங்கத்தின் உயர் அதிகாரி...

15 11
இலங்கைசெய்திகள்

வாக்களிப்பதைத் தவிர்த்து கொழும்பில் தங்கியிருந்த 10 லட்சம் வாக்காளர்கள்

கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது வேறுபிரதேசங்களைச் சேர்ந்த சுமார் பத்து லட்சம் வாக்காளர்கள், வாக்களிப்பதைத்...

16 11
இலங்கைசெய்திகள்

இலங்கையை உலுக்கிய பயங்கர விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு

றம்பொட பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் ஊடகம்...

14 11
இலங்கைசெய்திகள்

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபையின் அறிவிப்பு

மின்சார கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை அடுத்த வாரம் பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம்...