இந்தியா – தென்னாப்பிரிக்கா 4-வது டி20 போட்டி ரத்து: லக்னோவில் கடும் பனியால் பாதிப்பு!

500x300 23304852 4 fog

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் கட்டாக்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியாவும், நியூ சண்டிகாரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவும் வெற்றி பெற்றன.

தர்மசாலாவில் நடந்த 3-வது ஆட்டத்தில் மீண்டும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இன்று நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில் கடும் பனி காரணமாக இந்த போட்டி இரத்து செய்யப்பட்டது.

இதனால் 2-1 என்ற கணக்கில் முன்னிலை உள்ள இந்தியா அடுத்த போட்டியில் தோல்வி அடைந்தாலும் தொடரை இழக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version