FIFA போட்டி! – 600 இலங்கையர்கள் உட்பட 6500 பேர் உயிரிழப்பு!!

football 150x150 2

கட்டாரில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் நிர்மாணப் பணிகளில் பங்கெடுத்த சுமார் 600 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மைதான கட்டுமானம், வீதி அமைப்பு, ஹோட்டல் கட்டுமானம் போன்றவற்றில் வேலை செய்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கத்தாரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.22 கோடிக்கு மேல் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 6500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக கார்டியன் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. மரணத்திற்கான காரணம் எதுவாக இருந்தாலும், அவர் மாரடைப்பினால் மரணமடைந்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கார்டியன் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் ஆராயச் சென்ற பிபிசி ஊடகவியலாளர்கள் குழுவை கட்டார் அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

#SriLankaNews #sports #world

Exit mobile version