tamilni 276 scaled
செய்திகள்விளையாட்டு

சி.எஸ்.கே அணியுடன் இணைந்த பாலிவுட் நடிகை

Share

சி.எஸ்.கே அணியுடன் இணைந்த பாலிவுட் நடிகை

சி.எஸ்.கே அணியின் விளம்பர தூதராக பிரபல பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

17ஆவது ஐ.பி.எல் ரி -20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் மற்றும் மே மாதங்களில் நடத்தப்படவுள்ளது.

இப்போட்டியை அடுத்த மாதம் 22 ஆம் திகதி தொடங்கி மே இறுதி வரை நடத்த ஐ.பி.எல் நிர்வாகம் திட்டமிட்டிருப்பினும் உறுதியான திகதி அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்த முக்கியமான தகவல்கள் அடுத்தடுத்து வெளிவருகின்றன.

சமீபத்தில் சி.எஸ்.கே அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப் உரிமையைப் பெற்று தற்போது மற்றொரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.

அதாவது அணியின் பிராண்ட் அம்பாசிடராக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

எனவே எதிர்வரும் சீசனில் சி.எஸ்.கே அணி வீரர்கள் பங்கேற்கும் அனைத்து விளம்பரங்களிலும் கத்ரினா கைஃப்பும் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோன்று போட்டிகளையும் நேரில் கண்டுகளித்து அணியை ஊக்கப்படுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...