tamilni 569 scaled
செய்திகள்விளையாட்டு

சிஎஸ்கே இரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்

Share

சிஎஸ்கே இரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்

இந்தியன் பிரீமியர் லீக்(ஐபிஎல்) தொடரானது அடுத்தமாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், சென்னை அணியின் மேலும் இரண்டு நட்சத்திர வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் போட்டிகள் அடுத்த மாதம் மார்ச் 22-ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது.

தொடருக்கான போட்டி அட்டவணையை அண்மையில் வௌளியானதுக்கமைய முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.

இந்நிலையில் சென்னை அணியின் நட்சத்திர வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சிவம் தூபேவிற்கு ரஞ்சி போட்டிகளில் விளையாடும் போது காயம் ஏற்பட்டுள்ளதாகவும் குணமடைய சில மாதங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.இதனால் அவர் இவ்வருட ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பாரா என்று சந்தேகமாக உள்ளது.

இந்நிலையில் ஷிவம் தூபேவை தொடர்ந்து மேலும் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர்களான டேவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நியூசிலாந்தில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலியா அணிக்கெதிரான ரி20 தொடரில் விளையாடி வரும் டேவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளதுடன் அவர்கள் இருவரும் இரண்டாவது போட்டியில் விளையாடவில்லை.

ஐபிஎல் தொடருக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியிருக்கும் வேளையில் அவர்கள் இருவருமே காயமடைந்துள்ளதால் எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பார்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா கடந்த ஆண்டு நடைபெற்ற மினி ஏலத்தில் சென்னை அணிக்காக வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...