செய்திகள்

முதல் பந்திலேயே கோலி காலி – அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா

Published

on

முதல் பந்திலேயே கோலி காலி – அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாம் நகரில் நடைபெற்று வருகிறது. முதல் நாளான நேற்றுமுன்தினம் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் ஜோ ரூட் மட்டும் அரைச்சதம் அடித்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 4, ஷமி 3 விக்கெட் வீழ்த்தினர். அதனையடுத்து இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்சை தொடங்கி ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்தது.

இரண்டாவது நாளான நேற்று இந்திய அணியில் ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் ஆட்டத்தை தொடர்ந்தனர். இருவரும் மிக நேர்த்தியான டெஸ்ட் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விக்கெட்டை பறிகொடுத்துவிடக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக துடுப்பாட்டம் ஆடினர். அதனால், இங்கிலாந்து அணியால் இருவரது விக்கெட்டையும் வீழ்த்தவே முடியவில்லை. இந்த ஜோடி 30 ஓவர்களுக்கு மேல் விக்கெட்டை பறிகொடுக்காமல் விளையாடியது. இறுதியில் ராபின்சன் வீசிய 38ஆவது ஓவரில் 36 ரன்கள் எடுத்த நிலையில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி 97 ரன்கள் எடுத்திருந்தது.

ரோகித் சர்மா ஆட்டமிழந்ததை அடுத்து களமிறங்கிய புஜாரா வெறும் 4 ரன்களில் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து நடையைக் கட்டினார். அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் விராட் கோலி தான் சந்தித்த முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். விராட் கோலியை தொடர்ந்து ரகானேயும் 5 ரன்னில் ரன் அவுட் ஆனார். இதனால், இந்திய அணி 15 ரன்களுக்குள் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தது. தற்போது கே.எல்.ராகுல் அரைசதம் கடந்து விளையாடி வருகிறார். அவருடன் ரிஷப் பண்ட் களத்தில் உள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version