உயர்தரப் பரீட்சையில் தகுதி பெறும் விசேட தேவையுடைய மாணவர்கள், நாட்டிலுள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் உள்ள அனைத்துப் பீடங்களிலும் (Faculties) அனுமதிக்கப்படுவார்கள் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த முக்கியமான தீர்மானம் கல்விப் பிரதி அமைச்சர் மதுர செனவிரத்னவினால் எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, விசேட தேவையுடைய மாணவர்களுக்கு நான்கு பீடங்களில் மாத்திரமே பல்கலைக்கழகங்களில் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வந்தன.

